ஈழம் - இலங்கைச் செய்திகள்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஐ.தே.க. முழு ஒத்துழைப்பு வழங்கும்: ரணில் பேட்டி!..
2010-09-05 8:22:01 AM
மாறுபட்டுள்ள சூழ்நிலைமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக உணர வேண்டியுள்ளதுடன் சில விட்டுக் கொடுப்புகளையும் மேற்கொள்ளத் தயாராகவிருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் எதனை சரியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகத் திட்டமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். !

புதிய திருத்தம் மூலம் தமது பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை : மஹிந்த ராஜபக்சே தகவல்..!..
2010-09-05 8:17:49 AM
புதிய 18-வது அரசியல் திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிகளின் பதவித் தவணைக் காலம் அதிகரிக்கப்படுகிறது. எனினும் தமது ஆட்சி காலம் அதிகரிக்கப்படவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். !

புனர்வாழ்வளிக்கப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த 508 இளைஞர் யுவதிகள் கையளிப்பு ..
2010-09-05 8:14:23 AM
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட, முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த 508 இளைஞர் யுவதிகள் சனிக்கிழமையன்று அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள்.

மகிந்தா ஆட்சி பற்றி கருத்து கூறினால் தமக்கு வெள்ளை வேன் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க அச்சம்..!..
2010-09-05 8:12:07 AM
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் கேட்டபோது அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்தால் தமக்கு வெள்ளை வேன் அனுப்பப்பட்டு விடும் என குறிப்பிட்டுள்ளார்.!

சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம் உண்டு..!..
2010-09-05 8:08:22 AM
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. !

மகிந்தாவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபா!..
2010-09-04 12:17:24 PM
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாவனையிலுள்ள வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபா என செய்திகள் வெளியாகியுள்ளன. 2006ஆம் ஆண்டு சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட போது, அவரின் பாவனையில் இருந்த வாகனங்களின் பெறுமதி மூன்று கோடியே ஒன்பது இலட்சத்து !

ஆணிகள் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மன்னிப்புச் சபை கோரிக்கை!..
2010-09-04 11:50:29 AM
சவூதி அரேபிய எஜமானரால் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் உடலில் ஆணிகள் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அந் நாட்டின் அதிகாரிகளை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற 49 வயதான ஆhழியவதி என்பவர் அதிக வேலைப்பளு குறித்து !

விடுதலையான போராளிகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்!..
2010-09-04 11:12:26 AM
சிறிலங்கா படைத்தரப்பின் வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான உடலுறுப்புக்களை இழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். தாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட !

80 சீனர்களுக்கு சிறிலங்காவில் குடியுரிமை!..
2010-09-04 11:02:59 AM
இலங்கையில் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வந்த 80 சீனப் பிரஜைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் குடியுரிமை வழங்கியுள்ளது. 2008ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் அடிப்படையில் இச் சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் !

தமிழ் மக்களுடன் டேவிட் மிலிபான்ட் சந்திப்பு! - ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தும் ஆராய்வு!!..
2010-09-04 10:24:08 AM
பிரித்தானிய தொழிற்கட்சியின் அடுத்த தலைவருக்கான வேட்பாளர்களில் ஒருவரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான டேவிட் மிலிபான்ட் இன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இக் கூட்டம் Central Hall Westminister, Storey’s Gate, London. SW1H 9NH எனும் முகவரியில் இன்று மாலை !

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட வான்படை வீரர் கைது ..
2010-09-04 6:27:21 AM
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட வான் படை வீரர் ஒருவரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் சீதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அமைச்சர் பீரிஸ் மீது ஐ.தே.க. நம்பிக்கையில்லாப் பிரேரணை ..
2010-09-04 6:25:57 AM
வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் சர்வதேச விவகாரங்களை கையாள்வதில் தோல்வியை தழுவிக் கொள்கிறார் என்று குற்றம்சாட்டி ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நேற்று பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சேவிடம் கையளித்துள்ளது.

தமிழ் மக்கள் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம்: நல்லிணக்க குழு முன் டக்ளஸ் சாட்சியம் ..
2010-09-04 6:23:30 AM
தமிழர்களைப் பொறுத்தவரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட்சியமாகக் கருதுகிறோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவேக வீதி ..
2010-09-04 6:19:31 AM
இலங்கையின் தென்மாகாண அதிவேக வீதி நிர்மாண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேற்படி திட்டத்தின் கீழ் 130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் திட்டத்தில் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமான அதிவேக எக்ஸ்பிரஸ் வீதி அமைக்கப்படுகின்றது. இவ்வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறைவரை நீண்டு செல்கின்றது.

அரசியலமைப்பு சட்ட விரோதமானதென தெரிவிப்பதற்கு ஆளும் கட்சியினருக்கு முதுகெலும்பில்லை: மங்கள சமரவீரா கருத்து..!..
2010-09-04 5:59:23 AM
உத்தேச அரசியலமைப்பு சட்ட விரோதமானதென தெரிவிப்பதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். !

பிரபாகரனின் வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்கள் கைது ..
2010-09-04 5:56:38 AM
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

8-ம் திகதி கறுப்பு தினமாக பிரகடனம்: கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு ..
2010-09-04 5:54:23 AM
அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற அரசியலமைப்பு திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள 18-வது அரசியலமைப்புக்கு எதிரான அமைப்பு வரும் 8-ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அன்றைய தினத்தை கறுப்பு தினமாக

இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் ..
2010-09-04 5:52:31 AM
இலங்கைக்கு விசேட நிரந்தர பிரதிநிதி ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

ஈழத்தமிழர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி: இலங்கையைச் சேர்ந்தவர் இந்தியாவில் கைது ..
2010-09-04 5:50:42 AM
இலங்கை தமிழர்கள் 52 பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ததாக இலங்கையைச் சேர்ந்தவரை குற்றாலத்தில் பொலிசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் இலங்கை தமிழர்கள் தங்கி இருப்பதாக நெல்லை மாவட்ட கியூ பிராஞ்ச் பொலிசாருக்கு தகவல்

அரசியலமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு திங்கள்கிழமையன்று ஆராயும் ..
2010-09-04 5:47:52 AM
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்துக்குப் பாராளுமன்றத்தில் ஆதரவளிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளது.

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.