உலகச் செய்திகள்
அமெரிக்காவில் சூறாவளி புயல்..
2010-09-04 7:51:23 AM
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் சூறாவளி புயல் வீசுகிறது. இதற்கு “ஏர்ல்” என பெயரிட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.


நியூசிலாந்தில் பயங்கர நில நடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்.!..
2010-09-04 7:48:36 AM
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் தெற்கு பகுதியில் கிறிஸ்ட் சர்ச் நகரம் உள்ளது. தீவு பகுதியான இது நியூசிலாந்தின் 2-வது பெரிய நகரமாகும். இங்கு 3 லட்சத்து 42 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இதன் அருகே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று நள்ளிரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் அதிரடியாக குலுங்கின.


குவெட்டா ஊர்வலத்தில் பயங்கரம் தற்கொலைப்படை தாக்குதல் 42 பேர் பலி..
2010-09-04 6:33:08 AM
குவெட்டா : பாகிஸ்தானின் குவெட்டா நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய ஊர்வலத்தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில், 42 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். ஏற்கனவே வெள்ள பாதிப்பில் நிவாரணங்களை முழு வீச்சில் செய்ய முடியாமல் தவிக்கும் பாக்., அரசு, அடுத்தடுத்த


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சீருடை அணிந்தார்காஸ்ட்ரோ..
2010-09-04 6:30:34 AM
ஹவானா: கியூபா நாட்டின் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ 4 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் அவரது தம்பி ரவுல் அதிபராக பதவி வகித்து வருகிறார்.


பாக். வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5ஆயிரம் கோடி நிதி உலக வங்கி உதவி.!! ..
2010-09-03 10:55:35 AM
பாகிஸ்தானில் சிந்து, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாணாங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக உலக நாடுகள் உதவி புரிந்துள்ளன. உலக வங்கி ரூ. 4,500 கோடி நிதி உதவி வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் தற்போது கூடுதலாக ரூ. 500 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.


தினமும் 40 சிகரெட் பிடிக்கும் 2 வயது சிறுவன்.!! Video..
2010-09-03 7:43:24 AM
இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிஷால் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவனது தந்தை முதன் முதலாக ஒரு சிகரெட்டை பற்ற


குண்டு வெடிப்பில் 37 பேர் பலி எதிர்த்து கராச்சியில் கடையடைப்பு..
2010-09-03 6:30:49 AM
லாகூர் : பாகிஸ்தானின் லாகூர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில், தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் ஷியா பிரிவு முஸ்லிம்களால் புனிதராக கருதப்படும் இமாம் அலியின் நினைவு தினம், நேற்று


அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்.!! ..
2010-09-02 7:46:06 AM
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர்


இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்.!!..
2010-09-02 6:58:07 AM
சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார்.


அமெரிக்க விமானத்தில் தீவிபத்து..
2010-09-02 6:56:14 AM
சான் பிரான்சிஸ்கோ : சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்ட குவான்டன் விமானத்தின் ஒரு இன்ஜின் நடுவானில் வெடித்து சிதறியது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு, குவான்டன் போயிங் 747-400 விமானம் 212 பயணிகளுடன் புறப்பட்டது. வானில் பறந்த 15


தலிபன்களுடன் பேச்சுவார்த்தையா: அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு..
2010-09-02 6:54:24 AM
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்வதற்கும், தேசிய அரசு அமைப்பதற்கும் தலிபான்கள், உள்ளிட்ட பயங்கரவாத தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மத்திய கிழக்குநாடுகளைச் சேர்ந்த மீடியாக்கள் செய்தி வெளியிட்டதற்கு அமெரிக்கா திட்டவட்டமா மறுப்பு தெரிவித்துள்ளது.


அமெரிக்க டிஸ்கவரி டி.வி. அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ஊழியர்கள் சிறைபிடிப்பு.!!..
2010-09-02 6:52:28 AM
டிஸ்கவரி டி.வி. தலைமை அலுவலகம் அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டனில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் புகுந்தான். பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்த அவன் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டினான்.


பின்லேடன் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை.! அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு.!..
2010-09-01 10:50:55 AM
சர்வதேச பயங்கரவாதியும், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவருமான ஓசாமா பின்லேடனின் உதவியாளர் மம்தோ மக்மத் சலீம் (வயது 52). சூடானை சேர்ந்த இவர் ஈராக் குடியுரிமை பெற்றவர். கடந்த 1998-ம் ஆண்டு கென்யா மற்றும் தான்சானியா நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் இவர் கைது செய்யப்பட்டார்.


முஷரப்பை கொல்ல முயன்ற 6 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை.!!..
2010-09-01 6:42:22 AM
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்த போது இவரை கொலை செய்ய தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் முயற்சி செய்தனர். கார்குண்டு மூலம் இவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதை அறிந்த போலீசார் ராவல்பிண்டி அருகே உள்ள சாதிகாபாத் பகுதியில் 13 தீவிரவாதிகளை கைது செய்தனர்.


தெரசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா.!!..
2010-09-01 5:49:22 AM
வாஷிங்டன் : அன்னை தெரசாவுக்கு, நினைவு தபால் தலை வெளியிட உள்ளதாக, அமெரிக்க தபால்துறை அறிவித்துள்ளது.


தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து.!..
2010-09-01 5:45:16 AM
டோக்கியோ: ஜப்பானின் தென்பகுதியில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதால் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் 216 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சீனா, கொரிய திபகற்பத்தில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதாக ஜப்பான் வானிலை


ஈராக் போர் முடிந்தது : அதிபர் ஒபாமா அதிகராப்பூர்வ அறிவிப்பு.!!..
2010-09-01 5:42:38 AM
பாக்தாத் : ஈராக்கில் இருந்த அமெரிக்க ‌தாக்குதல் படை செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிலிருந்து


ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது ஈரான் நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம்.!!..
2010-08-31 11:14:20 AM
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் வெளியீடு..!..
2010-08-31 8:14:12 AM
கடலில் மூழ்கிப் போய் விட்ட டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமான இந்தப் படங்கள் சிலிர்க்க வைப்பதாக உள்ளது. உலக மக்களால் மறக்க முடியாத பெயர் டைட்டானிக். 1912ம் ஆண்டு 1500பேருக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அன்டார்க்டிக் கடலில் சென்று


புகை கக்குகிறது எரிமலை ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..
2010-08-31 6:28:59 AM
கபன்ஜகே(இந்தோனேசியா) : இந்தோனேசியாவில் நானூறு ஆண்டுகளுக்குப் பின் எரிமலை ஒன்று, கடும் புகையைக் கக்கத் தொடங்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள், கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.


ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.