
நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பேராசிரியர் மார்க்ரெட் விசர்ஸ் வைட்டமின்களின் பயன்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.
புற்றுநோயை தடுப்பதிலும், அதற்கு சிகிச்சை அளிப்பதிலும் வைட்டமின் “சி”யின் பங்கு குறித்து தீவிர ஆய்வு செய்தார். முந்தைய ஆய்வுகளில் வைட்டமின் “சி” குறைபாடு உள்ளவர்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் தாக்குவது தெரியவந்தது.
வைட்டமின் “சி” குறைபாடு உள்ளவர்களுக்கு எச்.ஐ.எப்.-1 என்ற புரோட்டீன் ஏற்படுகிறது. இது புற்றுநோய் தங்கு தடையின்றி வளர உதவுகிறது. எனவே புற்று நோய் வளர்ச்சியை தடுப்பதில் வைட்டமின் “சி” பெரும்பங்கு வகிக்கிறது என பேராசிரியர் மார்க்ரெட் விசர்ஸ் தெரிவித்துள்ளார்.