
மெல்போர்ன் பல்கலைக் கழகம், நார்வேயன் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அண்டார் டிகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு வாழும் 4 புதிய ரக ஆக்டோபஸ்களை கண்டு பிடித்தனர். அவை விஷத்தன்மை வாய்ந்தவையாகும்.
அவற்றில் இருந்து விஷத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். இதன் மூலம் அவற்றில் இருந்து மருந்து தயாரிக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
இவை தவிர கட்டில்பிஷ், ஸ்குயிட் போன்ற மீன்களின் விஷத்தில் இருந்தும் மருந்து தயாரிக்கலாம். ஏனெனில் இவை 0 டிகிரி வெப்பநிலை உள்ள ஆழ்கடலில் வாழ்பவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.