ஈழம் - இலங்கைச் செய்திகள்
கண்ணி வெடி அகற்றலுக்காக சீன இராணுவத்தினர் இலங்கை வருகின்றனர்

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 06:28:02 AM GMT    ]

கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் என்ற பெயரில், சீன இராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்ப சீன அரசாங்கம் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக சீனாவில் இருந்து குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சீன ராணுவ அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1500 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாகாணங்களில் மேலும் 2400 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் நிலகண்ணி வெடிகளை அகற்ற வேண்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வட மாகாணத்தில் உள்ள கச்சத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் சீன இராணுவத்தினர் அதிக அளவில் தங்கி இருப்பதாக வடமாகாண மீனவர்களும், தமிழக மீனவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய அரசாங்கத்தை அதிருப்தி அடைய செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.