சினிமாச் செய்திகள்
பில்லா பாகம்-2 வருகிறது..!

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 07:32:29 AM GMT    ]

பில்லாவுக்கு பிறகு அசல் படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கியிருக்க வேண்டும். சம்பள இழுபறியில் அசலை தவற விட்டார் அப்போது. அசல் போனால் என்ன? வட்டியும் முதலுமாக அடுத்த படத்தை இயக்குகிற வாய்ப்பை கொடுத்திருக்கிறாராம் அஜீத்.

ஒவ்வொரு முறையும் அஜீத் படத்தை பற்றிய செய்தியை அதிகார பூர்வமாக அறிவிப்பதற்குள் கருவான பாப்பாவே கைக்குழந்தையோடு நடக்க ஆரம்பித்துவிடும். அப்படி ஒரு குழப்பவாதி அஜீத்.

ஆனால், இந்த முறை இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது விஷ்ணு தரப்பு. தனது பி.ஆர்.ஓ. மவுனம் ரவி மூலம் இந்த தகவலை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.

பில்லா படத்தின் பார்ட்-2தான் விஷ்ணு இயக்கப் போகும் புதுப்படம். அடுத்த வருடம்தான் இப்படம் துவங்கப்படுகிறது என்பதால் பிற விஷயங்களை கப்சிப் ஆக்கியிருக்கிறார்கள்.

அஜீத் கால்ஷீட் இருக்கிறது என்றால் படத்தை தயாரிக்கதான் ஆயிரம் பேர் தயாராக இருப்பார்களே, அதில் ஒரு மகராசன் பெயரை முறைப்படி அறிவிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரைக்கும் பொறுமை காக்கவும். (டைரக்டரே நீங்களும்தான்)



Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.