இந்தியச் செய்திகள்
போலி என்கவுண்ட்டர் வழக்கு - குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி விசாரிக்கப்படுவாரா?

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 08:31:01 AM GMT    ]

போலி என்கவுண்ட்டர் வழக்கில், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியிடம், சி.பி.ஐ. போலீசார் விசாரிப்பார்களா? என்று கேள்வி எழுந்து இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தீவிரவாதி என்று கூறி, சொராபுதீன் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி கவுசர் பீயும் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம், 5 ஆண்டுகளுக்கு பின் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த வழக்கு முதலில் குஜராத் போலீசின் விசாரணையில் இருந்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குஜராத்தின் முன்னாள் மந்திரி அமித் ஷா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வழக்கு குஜராத் போலீசின் கையில் இருந்தபோது, விசாரணை அதிகாரியாக கீதா ஜோக்கி என்ற ஐ.பி.எஸ். அதிகாரி செயல்பட்டார். இவர் தற்போது ராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றுகிறார். இங்கிலாந்து சென்று இருக்கும் அவர் ஆகஸ்டு 6-ந் தேதி நாடு திரும்புகிறார்.

அவரிடம் ஏற்கனவே சி.பி.ஐ. இரு முறை விசாரணை நடத்தி இருக்கிறது. மேலும் விசாரணைக்கு வரும் 10-ந் தேதி அன்று வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது குஜராத் மாநில டி.ஜி.பி.யாக பி.சி. பாண்டே பணியில் இருந்தார். எனவே அவரை வரும் 11-ந்தேதி விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. கடிதம் அனுப்பி உள்ளது.


போலி என்கவுண்ட்டர் நடந்தபோது, உள்துறை இலாகா, முதல்-மந்திரி நரேந்திர மோடியிடம் இருந்தது. மேலும் தற்போது ஜெயிலில் இருக்கும் அமித்ஷாவிடமும், "இந்த வழக்கில் நரேந்திரமோடிக்கு தொடர்பு உண்டா?`` என்று சி.பி.ஐ,. அதிகாரிகள் விசாரணையின் போது கேட்டு இருக்கிறார்கள்.

எனவே நரேந்திர மோடியிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதுபற்றி மத்திய உள்துறை ராஜாங்க மத்திரி சல்மான் குர்ஷித்திடம நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர், "இந்த வழக்கு விசாரணை ஜனநாயக ரீதியில் நடந்து வருகிறது. இதில் பழிவாங்கும் உணர்வு இல்லை`` என்றார்.

குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் சுக்லா இது பற்றி கூறுகையில், "சம்பவம் நடந்தபோது உள்துறையை தன் கையில் நரேந்திரமோடி வைத்திருந்தார். சி.பி.ஐ. ஆழமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் இறுதி கட்டத்தில்தான் நரேந்திரமோடியிடம் விசாரிக்கப்படுமா? என்பது தெரிய வரும்`` என்றார்.

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.