இந்தியச் செய்திகள்
ஜனாதிபதி மாளிகை-பாராளுமன்றம்-பிரதமர் வீடு - ஒரு வருட மின் கட்டணம் ரூ.16 கோடி - மத்திய அரசு தகவல்

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 08:34:47 AM GMT    ]

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற கட்டிடம், மற்றும் பிரதமர் வீடு ஆகியவற்றுக்கான ஓராண்டு மின்கட்டணம் ரூ.16 கோடியே 33 லட்சம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த கோத்தாரி என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் இந்த தகவலை பெற்று வெளியிட்டுள்ளார்.

பிரதமர் வீட்டுக்கான மின் கட்டணம் 2007-2008-ல் ரூ.1 கோடி என்றும் 2008-2009-ல் ரூ.1 கோடியே 27 லட்சம் என்றும் 2009-2010-ல் ரூ.1 கோடியே 15 லட்சம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்கான மின் கட்டணம் 2007-2008-ல் ரூ.6 கோடியே 30 லட்சம். 2008-2009-ல் ரூ.6 கோடியே 88 லட்சம் 2009-2010-ல் ரூ.6 கோடியே 67 லட்சம் ஆகும்.

பாராளுமன்றத்துக்கான மின் கட்டணம் 2008-ல் ரூ.6 கோடியே 25 லட்சம். 2009-ல் ரூ.8 கோடியே 50 லட்சம் ஆகும்.

சுப்ரீம் கோர்ட்டுக்கான மின் கட்டண விவரத்தையும் கோத்தாரி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டுக்கான மின் கட்டணம் 2007-ல் ரூ.2 கோடியே 43 லட்சம், 2008-ல் ரூ.2 கோடியே 47 லட்சம், 2009-ல் ரூ.2 கோடியே 18 லட்சம் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.