உலகச் செய்திகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவுக்கு அழைப்பு இல்லை.!!

[ பிரசுரித்த திகதி : 2010-07-30 08:39:37 AM GMT    ]

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன்- ஹிலாரி கிளின்டன் தம்பதியின் மகள் செல்சியா (30). ஹிலாரி கிளிண்டன் தற்போது அதிபர் ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு மந்திரியாக உள்ளார்.
 
செல்சியாவும், நிதி நிறுவனம் நடத்தி வரும் மார்க் மெஷ்வின்ஸ்கியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் நாளை (31-ந் தேதி) நியூயார்க்கில் ரின்பெக் என்ற இடத்தில் உள்ள எஸ்டேட்டில் நடக்கிறது.  
திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. திரும ணத்திற்கு குறிப்பிட்ட வர்கள் மட்டுமே அழைக் கப்பட்டுள்ளனர். ஆனால் மிக முக்கிய பிரமுக ரான அமெரிக்க அதிபர் ஒபாமா இன்னும் அழைக்கப்பட வில்லை.
 
அவருக்கு இன்னும் முறைப்படி நேரிலோ அல்லது தபாலிலோ அழைப்பு அனுப்பப்பட வில்லை. இத்தகவலை அதிபர் ஒபாமாவே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டெலிவிஷனிலும், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, “செல் சியாவின் திருமணத்திற்கு அவரது பெற்றோர் பில் கிளிண்டனும், ஹிலாரியும் என்னை அழைக்க வில்லை.
 
“ஒரு திருமணத்தில் 2 அதிபர்கள் கலந்து கொள் வதை அவர்கள் விரும்ப வில்லை போலும்” என நகைச் சுவையுடன் கூறினார். செல்சியாவின் திருமண ஏற்பாடுகள் மிகவும் ரகசியமாக நடைபெறுகின்றன. திருமணத்திற்கு வரும் விருந்தினர்களும், பரிசு பொருட்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது.



Bookmark and Share
Untitled Document
பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள்

சிறப்பு செய்திகள்/கட்டுரைகள்

ஈழம் - இலங்கை

இந்தியா

உலகம்

விளையாட்டு

சினிமா

Copyright © 2010 News.Tamilulakam . All rights reserved.